வாக்கு கேட்டுவருபவர்களை மலையகத்தை விட்டே விரட்டியடிப்போம்!
எமது கோரிக்கையான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்விற்கு எதிராக கையொப்பமிட்டால் வாக்கு கேட்டுவருபவர்களை மலையகத்தை விட்டே விரட்டியடிப்போமென சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கணேசன் உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வினை வலியுறுத்தி இடம்பெற்றுவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கணேசன் உதயக்குமார் என்ற இளைஞனே இன்று (புதன்கிழமை) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மீண்டும் தன்னெழுச்சியாக இளைஞர்கள் ஒன்றிணைந்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வினை வலியுறுத்தி இரண்டாவது நாளாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இப்போராட்டமானது தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய் கிடைக்கவேண்டுமென வலியுறுத்தியே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எமது கோரிக்கையான ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கிடைக்கும்வரை நாம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இருந்தவர்கள் இன்று ஜனாதிபதியைச் சந்திக்க இருந்தனர்.
ஆனால் எமது போராட்டம் காரணமாக ஜனாதிபதியுடனான சந்திப்பு இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் நாம் எமது போராட்டத்தினை நிறுத்தப்போவதில்லை.
இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தினை ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக கைச்சாத்திட்டால், எவருமே மலையகத்திற்கு வந்து எங்களிடம் வாக்குக் கேட்க முடியாது.
அவ்வாறு வருபவர்களை இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விரட்டியடிப்போம் என இங்கு உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை