வவுனியாவில் கெரோயினுடன் ஜவர் கைது.!
குறித்த சம்பவம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளதுடன் இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப்பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலிற்கமைய வவுனியா தேக்கவத்தை பகுதியிலுள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது கெரோயினை பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் இருந்த 5 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
வவுனியாவை சேர்ந்த ஜந்து இளைஞர்கள் கைதுசெய்யபட்டதுடன் அவர்களிடமிருந்து சில கெரோயின் பைக்கற்றுகளையும் பொலிசார் மீட்டுள்ளனர். கைதுசெய்யபட்டவர்கள் நாளையதினம் (20.12) நீதி மன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை