ரணி­லு­டன் பணி­யாற்ற அமெ­ரிக்கா விருப்­பம்

ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆட்­சிப் பொறுப்­புக்கு மீண்­டும் வந்­த­தைப் பாராட்­டி­யுள்ள அமெ­ரிக்கா, அவ­ரு­டன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு ஆர்­வ­மாக இருப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளது.


அமெ­ரிக்­கத் தலை­ந­கர் வொஷிங்­ட­னில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் உரை­யாற்­றிய அமெ­ரிக்க இரா­ஜாங்­கத் திணைக்­க­ளத்­தின் பேச்­சா­ளர் றொபேர்ட் பல்­லா­டினோ அமெ­ரிக்­கா­வின் நிலைப்­பாட்­டைத் தெரி­வித்­துள்­ளார்.

”கடந்த பல வாரங்­க­ளாக நீடித்த அர­சி­யல் நெருக்­க­டிக்கு, அர­ச­மைப்பு நெறி­முறை மற்­றும் சட்­டத்­தின் ஆட்­சிக்கு உட்­பட்ட வகை­யில் தீர்வு கண்­ட­மைக்­காக இலங்­கை­யின் அர­சி­யல் தலை­மையை நாங்­கள் பாராட்­டு­கி­றோம்.

இந்தோ- – பசு­பிக்­கின் மிகப் பெறு­ம­தி­யான பங்­கா­ள­ராக இலங்கை இருக்­கி­றது. மேல­திக ஒத்­து­ழைப்பு மற்­றும் பொது­ந­லன் சார்ந்த பிராந்­திய விவ­கா­ரங்­கள் மற்­றும் இரு­த­ரப்பு விவ­கா­ரங்­க­ளில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வு­ட­னும், அவ­ரது அமைச்­ச­ர­வை­யு­ட­னும் இணைந்து முன்­நோக்­கிச் செயற்­ப­டு­வ­தற்கு நாங்­கள் எதிர்­பார்த்­தி­ருக்­கி­றோம்’ என்­றும் அவர் தெரி­வி­த­தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.