ரஷ்யாவின் கடற்படை கப்பல்கள் கொழும்பில் நங்கூரமிட்டது!

நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு ரஷ்யாவின் கடற்படை கப்பல்கள் (வரியாக், அட்மிரல் பாண்டலேவ் மற்றும் போரிஸ் போடோமா) கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.


529 கடற்படை உறுப்பினர்களைகொண்டு வரியாக் கப்பலும், 388 கடற்படை உறுப்பினர்களை கொண்டும் செயற்படுத்தப்படுகின்றது.

ரஷியா கடற்படை கப்பல் போரிஸ் போடோமா 75 அதிகாரிகள் மற்றும் மாலுமிகளால் செயற்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் ரஷ்ய தூதரகத்துடன் இணைந்த அதிகாரிகளின் குழு ஒன்றும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது.

மேலும் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தில், இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

No comments

Powered by Blogger.