நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா மற்றும் மூவர் கைது!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா மற்றும் மேலும் மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட குறித்த நால்வரும் இன்று (வியாழக்கிழமை) காலை கொடகவெல பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை ஜனவரி மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இம்மாதம் 16 ஆம் திகதி கொடகவெல பிரதேசத்தில் வைத்து ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக ரஞ்சித் செய்சா மற்றும் பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.