உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வஜிர வசம்!

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள், உள்விவகாரம் மற்றும்
உள்நாட்டலுவல்கள் அமைச்சுப் பொறுப்பு வஜிர அபேவர்தனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் பைஸர் முஸ்தபா வசமிருந்த குறித்த அமைச்சுப் பதவி புதிய அரசாங்கத்தில் வஜிரவின் வசமாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வில் அவர் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.