கல்முனையில் மாபெரும் இரத்ததான முகாம்

உங்கள் மனைவியின் பிரசவ நேரத்தில் இழக்கப்படும் இரத்தத்திற்கு பதிலீடு
செய்து இரத்தம் வழங்க உங்களைவிடப் பொருத்தமானவர் யார்? உங்களது தாய் அல்லது சகோதரி அல்லது குழந்தை அல்லது குடும்பத்தாரின் மருத்துவ தேவையின்போது அவர்களுக்கு இரத்தம் வழங்க உங்களைவிடப் பொருத்தமானவர் யார்? இரத்தம் வழங்குவதால் எம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி ஏன் நமது இளைஞர்கள் இன்னும் அறியாமல் இருக்கின்றனர்? இதனால் பாதகங்கள் ஏற்படும் என்ற மூடத்தனமான எண்ணங்களை எப்போது களைவது? 

இளைஞர்களே!  இரத்ததானம் செய்ய முன்வாருங்கள்.

 காலம்  இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2018.12.23 (ஞாயிற்றுக்கிழமை)

 நேரம் காலை 09.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணிவரை

 இடம் கமு/றோயல் வித்தியாலயம் கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டம் , கல்முனை 

தொடர்புகளுக்கு 077 3815005,   077 9025010

 உயர்வான மற்றவர் உயிர் காக்கும் உன்னத பணி. உங்கள் இரத்தம் கொண்டு இன்னோரு உயிர் இப்பூமியில் மகிழ்வாக வாழ நீங்கள் செய்யும் மகா தானம் இது. கல்முனை அஸ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நீக்க கல்முனையான்ஸ் போரம் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் இந்த இரத்ததான நிகழ்வுக்கு நீங்களும் வந்து இணைந்து இந்த உன்னத பணியில் பங்காளராகுங்கள். பெண்களுக்கும் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.