மைத்­தி­ரியை வீட்­டுக்கு அனுப்ப வேண்­டும்

நாட்­டின் அர­ச­மைப்­பை­யும், நாடா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­தை­யும் கேள்­விக்கு உட்­ப­டுத்­திய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, 20ஆவது திருத்­தச் சட்­டத்தை நிறை­வேற்றி வீட்­டுக்கு அனுப்­ப­வேண்­டும். இவ்­வாறு மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் (ஜே.வி.பி.) நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பிமல் ரட்­நா­யக்க தெரி­வித்­தார்.


நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­று­முன்­தி­னம் செவ்­வாய்க்­கி­ழமை மக்­கள் விடு­தலை முன்­ன­ணி ­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நளிந்த ஜய­திஸ்­ஸ­வால் முன்­வைக்­கப்­பட்ட நிறை­வேற்று அதி­கார முறையை ஒழிக்­கக்­கோ­ரும் தீர்­மான வரை­வின் மீது நேற்­றுப் புதன்­கி­ழமை இரண்­டா­வது நாளா­க­வும் விவா­தம் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

காலில் விழ­வேண்­டும்
கடந்த மூன்­றாண்­டு­க­ளில் பக­லில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வு­ட­னும், இர­வில் மகிந்­த­வு­ட­னும் இருந்த சூழ்ச்­சிக்­கா­ரக் கும்­ப­லின் சூழ்ச்சி ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திகதி பக­லில் அரங்­கே­றி­யது. தான்­தோன்­றித்­த­ன­மான தனது அதி­கா­ரத்தை தக்க வைக்­கவே மைத்­திரி இந்­தச் சூழ்ச்­சியை அரங்­கேற்­றி­னார்.

ஜன­நா­ய­கத்­தைப் பாது­காக்க நாங்­கள் எடுத்த முயற்­சி­க­ளின்­போது சபா­நா­ய­கரை மிக­வும் இழி­வாகப் பேசி­னார்­கள். சபா­நா­ய­க­ரின் கதி­ரை­யை­யும், சபா­பீ­டத்­தை­யும் சிதைத்­தார்­கள். அப்­ப­டிச் செய்­த­வர்­கள், தங்­க­ளுக்கு எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வியை சபா­நா­ய­கர் அறி­வித்­த­தும், சபா­நா­ய­க­ரின் தீர்ப்பே இறு­தி­யா­னது என்­கின்­றார்­கள். இந்­தச் சூா்ச்சிக் கும்­பல் சபா­நா­ய­க­ரின் காலில் விழுந்து வணங்­க­வேண்­டும். சபா­பீ­டத்­தில் மண்­டி­யி­ட­வேண்­டும்.

முது­கெ­லும்பு இல்லை
திருட்டு வழி­யில் தலைமை அமைச்­ச­ரா­கச் சென்­ற­வர்­கள் நாடா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மை­யைத் தக்க வைத்­துக் கொள்­வ­தற்­காக இன்று போரா­டும் நிலமை உரு­வா­கி­யுள்­ளது. ஜன­நா­ய­கத்­தின் பலத்தை அவர்­கள் இதன் மூலம் தெரிந்து கொள்ள முடி­யும். நாடா­ளு­மன்­றம் கலைக்­கப்­பட்ட மறு­க­ணமே மகிந்த உள்­ளிட்­டோர் தாமரை மொட்­டில் இணைந்­த­னர். ஆனால், இன்று இணை­ய­வில்லை என்­கின்­றார்­கள். அர­சி­யல் ரீதி­யாக ஒரு முது­கெ­லும்பு இருக்­க­வேண்­டும்.

நிறை­வேற்று அதி­கா­ரத்தை கைவி­ட­வில்லை
அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, சில­ருக்கு அமைச்­சுப் பத­வி­க­ளைக் கொடுக்க முடி­யாது என்று கூறி­வ­ரு­கின்­றார். அவ்­வாறு கூறு­வ­தற்கு அவ­ருக்கு அதி­கா­ரம் இல்லை. மைத்­தி­ரிக்கு ஆத­ர­வாக இருந்­தால் பத­வி­க­ளைக் கொடுக்க முடி­யும். எதி­ராக இருந்­தால் பதவி கொடுக்க முடி­யா­தென கூறு­கி­றார். இது தவ­றா­னது.

அர­ச­மைப்­புக்கு முர­ணா­னது. அரச தலை­வர் அவ­ரது அர­சி­ய­லுக்­காக நிறை­வேற்று அதி­கா­ரத்­தைத் தொடர்ந்து பயன்­ப­டுத்தி வரு­கின்­றார். 50 நாள் சூழ்ச்­சி­கள் முடிந்­துள்­ள­போ­தும், அமைச்­ச­ர­வையை நிய­மிக்க முடி­யா­துள்­ள­னர். தனது பத­வி­யைத் தக்க வைக்க அவர் தொடர்ந்து நிறை­வேற்று அதி­கா­ரத்­தைப் பயன்­ப­டுத்­து­கின்­றார்.

வாக்­கு­று­தி­கள் காற்­றில்
தமிழ், முஸ்­லிம் மக்­க­ளுக்கு அவர்­க­ளு­டைய உரி­மை­களை நிறை­வேற்று அதி­கா­ரத்­தின் மூலம் பாது­காத்­துக்­கொள்­ள­லாம் என்று கரு­து­கின்­ற­னர். அரச தலை­வர் தேர்­த­லின் போது பேரம் பேசு­வ­தற்­கான சில வாய்ப்­புக்­கள் உள்­ளன. ஆனால், ஜே.ஆர்க்கு பின்­னர் வந்த எவ்­வொரு அரச தலை­வ­ரும் வாக்­கு­று­தி­களை மாத்­தி­ரமே அளித்­த­னர். மைத்­தி­ரி­யும், மகிந்­த­வும் அவ்­வாறு பல வித­மான வாக்­கு­று­தி­களை கொடுத்­த­னர். ஆனால், எவ­ருமே அதனை நிறை­வேற்­ற­வில்லை. முஸ்­லிம்­க­ளின் எதிர்ப்­பின் மத்­தி­யில் ஊர­டங்கு சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தியே வடக்கு – கிழக்கை ஜே.ஆர். இணைத்­தார்.

அரச தலை­வர் ஒரு­வர் சர்­வா­தி­கா­ரப் போக்­கில் செயற்­பட்­டா­லும் அவ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்­டு­வர முடி­யாது. அரச தலை­வர் தேர்­த­லில் மாத்­தி­ரமே அவ­ருக்கு அழுத்­தம் கொடுக்க முடி­யும். பத­விக்­குத் தெரி­வா­கிய பின்­னர் மாறி­வி­டு­வார்­கள். அள­வுக்கு அதி­க­மாக குவிந்­துள்ள அதி­கா­ரங்­ளால் தன்­னு­டைய அதி­கா­ரத்தை தக்­க­வைத்­துக்­கொள்ள அர­ச­மைப்­பை­யும், நாடா­ளு­மன்ற சம்­பி­ர­தா­யங்­க­ளை­யும் அழி­வுக்கு உட்­ப­டுத்­து­கின்­ற­னர். நாடா­ளு­மன்­றத்­திற்கு பொறுப்­புக்­கூ­றும் தலைமை அமைச்­ச­ரின் கீழான ஆட்­சியே தேவை­யா­க­வுள்­ளது.

நிறை­வேற்று அதி­கார முறை­மை­க­ளால்
மக்­கள் உரி­மை­யைக் காக்க முடி­யாது
1977ஆம் ஆண்­டுக்கு முந்­திய ஒவ்­வொரு தேர்­தல்­க­ளின் போதும் கூட்­டணி ஆட்­சியே அமைக்­கப்­பட்­டன. அங்கு ஏனைய கட்­சி­க­ளுக்­கும் மதிப்­ப­ளிக்­கும் நிலை­யும், அவர்­க­ளின் கருத்தை உள்­வாங்­கும் நிலை­யும் காணப்­பட்­டது. உல­கில் பல்­வேறு நாடு­க­ளில் இம்­மு­றையே பின்­பற்­றப்­ப ­டு­கி­றது.

தமிழ், முஸ்­லிம் மக்­க­ளும் தேர்­தல் காலங்­க­ளில் கொடுக்­கப்­ப­டும் சில வாக்­கு­று­தி­களை நம்பி நிறை­வேற்று அதி­கார ஒழிப்­புக்கு எதி­ரா­க­வுள்­ள­னர். பேரு­வளை, திக­னை­யில் முஸ்­லிம்­கள் தாக்­கப்­பட்ட போது நிறை­வேற்று அதி­கா­ரத்­தால் தடுக்க முடிந்­ததா?. அமைச்­சுப் பத­வியை பெற்­றுக்­கொள்ள மாத்­தி­ரமே அரச தலை­வர் பதவி நல்­லது. மக்­க­ளின் உரி­மை­களை பாது­காக்க முடி­யாது.

முடிவு கட்­ட­வேண்­டும்
ஜே.ஆர். அரச தலை­வ­ரா­கச் செயற்­ப­டும்­போது, சிறீ­மா­வோ­வின் உரி­மை­யைப் பறித்­தி­ருந்­தார். அதே­போல் யாழ்ப்­பாண நூல­கம் எரிக்­கப்­பட்­டது. நிறை­வேற்று அதி­கா­ரம் நாட்­டுக்­கும், கட்­சிக்­கும் அல்ல பத­விக்­கா­கவே பயன்­ப­டுத்­தப்­ப­டும். நிறை­வேற்று அதி­கா­ரம் கட்­சி­யின் ஜன­நா­ய­கத்­தை­யும் பறித்­து­வி­டு­கி­றது.

கட்­சி­யி­னுள் கருத்­துச் சுதந்­தி­ரம் என்ற பேச்­சுக்கே இட­மில்­லா­துள்­ளது. நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­ப­தற்கு பல தட­வை­கள் மக்­கள் ஆணை­கள் கிடைத்­துள்­ளன. அவை பொய் வாக்­கு­று­தி­க­ளா­கவே இருந்­துள்­ளன. இதற்கு முடி­வு­கட்ட வேண்­டும். நாங்­கள் நாடா­ளு­மன்­றில் சமர்ப்­பித்­துள்ள 20ஆவது திருத்­தச்­சட்­டத்தை அனைத்­துக் கட்­சி­க­ளி­தும் திருத்­தத்­து­டன் நிறை­வேற்­றத் தயா­ரா­க­வுள்­ளோம்.

வெகு­வி­ரை­வில் 20ஆவது திருத்­தச்­சட்­டத்தை நிறை­வேற்றி அர­ச­மைப்­பை­யும் நாட்­டின் ஜன­நா­ய­கத்­தை­யும் கேள்­விக்கு உட்­ப­டுத்தி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வீட்­டுக்கு அனுப்ப வேண்­டும் – என்­றார்.

No comments

Powered by Blogger.