தமிழீழம் கிட்டும்வரை விடுதலைப் போராட்டம் தொடரும்.!

எமது விடுதலைப் போராட்டத்தில் நாம் அளப்பரிய தியாகங்களைச் செய்கின்றோம். தாங்கமுடியாத துன்ப, துயரங்களை
அனுபவித்திருக்கொன்றோம். ஆயிரமாயிரம் அப்பாவி மக்களின் உயிர்களைப் பரிகொடுத்திருக்கின்றோம். பெரும்தொகையான  இளம் போராளிகளை களத்தில் பலி கொடுத்திருக்கின்றோம். சகிக்க முடியாத அளவிற்கு நாம் அவமானப்பட்டிருக்கின்றோம். இழிமைப் படுத்தப்பட்டிருக்கின்றோம். சிங்களப் பயங்கரவாதமானது எமது தேசிய ஆன்மாவில் விழுத்திய்ழ் வடுக்கள் என்றுமே மாறப்போவதில்லை.

இத்தனை கொடுமைகளுக்குப் பின்னர் இத்தனை உயிரழிவுகள், பொருளழிவுகளுக்குப் பின்னர், இத்தனை மகத்தான தியகங்களுக்க்குப் பின்னர், இத்தனை வீரசாதனைகளுக்குப் பின்னர், நாம் சிங்கள அரசிடம் மண்டியிட்டு சலுகைகளுக்காக கைநீட்டப்போவதில்லை.

நாம் சுதந்திரமாகவும், கெளரவமாகவும் நிம்மதியாக சமாதானமாக வாழ்வதாயின் அது சுதந்திர தமிழீழத்தில்தான் சாத்தியமாகும். அந்த சுதந்திர தமிழீழம் கிட்டும்வரை எமது போராட்டம் தொடரும் என்பதை தெட்டத் தெளிவாக எடுத்துக் கூற விரும்புகின்றேன்.

தர்மமும் உண்மையும் இறுதியில் வெற்றியளித்து தமிழ்த்தாயில் கருக்கொண்டுள்ள வரலாற்றுக் குழந்தையான தமிழீழம் என்றோ ஒரு நாள் பிரசவமெடுக்கும் என்பது எனது நம்பிக்கை.

எம்மிடம் ஆத்மபலமும் ஆயுதபலமும் இருக்கிறது. மக்கள் பலமும் எமது கரங்களைப் பலப்படுத்துமானால் எமது இலட்சியம் வெற்றியடைவதை யாராலும், எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதை உறுதியுடன் கூற விரும்புகின்றேன்.

- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்…

(‘எனது மக்களின் விடுதலைக்காக’ என்ற நூலில் இருந்து)

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

No comments

Powered by Blogger.