இந்தியா செல்ல மூட்டை முடிச்சு கட்டும் சம்பந்தன்.!

பை பை மீண்டும் இந்தியா போகிறேன்
பதவி கிடைத்தால் திரும்பி வருகிறேன்.

இல்லையேல் இந்தியாவிலேயே செத்து தொலைக்கிறேன்

வெட்கம் மறந்து சிங்கக்கொடியை ஏற்றினேன்
சொறனையற்று மகிந்தவை தேசிய தலைவர் என்றேன்
மைத்திரியை எளிமையான தலைவர் என்றேன்
அப்படியிருந்தும் கடைசியிலை பதவியை பறிச்சிட்டாங்களே

பதவி போனால் சொகுசு பங்களா போய்விடுமே
சொகுசு வாகனங்களும் பறி போய்விடுமே
கூடவே சிங்கள பொலிஸ் பாதுகாப்பும் போய்விடுமே
ஜயகோ!
இவை எல்லாம் இல்லாமல் எப்படி என்னால் வாழ்வது?
என்னை நம்பி வந்த மகளும் மகனும் எப்படி வாழ்வது?

இந்த பதவியை வைத்து தமிழர்களுக்கு
என்ன மயிரைப் பிடுங்கினாய் என்று
நீங்கள் என்னை கேட்க நினைக்கலாம்
உண்மைதான் தமிழ் மக்களுக்கு எதுவும் கேட்கவில்லை.
அப்படியிருந்தும் பதவியை பறித்து விட்டார்களே?

அடுத்த தீபாவளிக்கு தீர்வு வரும் என்று
இத்தனை நாளும் சொல்லிக் கொண்டிரந்தேன்.
இனி என்னத்தை சொல்வது?
இப்படி புலம்ப வைச்சுட்டாங்களே?

No comments

Powered by Blogger.