ஊடகவியலாளரை திட்டிய பொலிஸ் உத்தியோகத்தர்

 இ.போ.ச சாரதியின் செயற்பாட்டாடு தொடர்பில் காயத்திற்குள்ளான வயோதிபர் தகவல் வழங்கிய ஊடகவியலாளரை திட்டிய பொலிஸ் உத்தியோகத்தர் இ. போ. ச சாரதி பேரூந்தியில் வயோதிபர் ஒருவர் ஏறுவதற்கு முன்பாக பேரூந்தை செலுத்தியமையினால் அவர் காயமடைந்த நிலையிலும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் அசமந்தமாhhக செய்றபட்டமை தொடர்பாக பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.


இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
வவுனியா புதிய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக பொலிஸாரினால் அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிழற்குடையில் இருந்து காரைநகர் டிப்போவுக்கு சொந்தமான இ. போ. சு பேரூந்தில் ஏறுவதற்கு வயோதிபர் முற்பட்ட நிலையில் அதனை நடத்துனருக்கு தெரிவித்துள்ளார்.
நடத்துனரும் ஏறுமாறு தெரிவித்த நிலையில் குறித்த வயோதிபர் தான் கொண்டு வந்த பொருட்களை பேரூந்தின் பி;ன்புறமாக வைப்பதற்கு முயற்சித்துக்கொண்டிருந்த நிலையில் சாரதி பேரூந்தை செலுத்தியுள்ளார். இதன் காரணமாக குறித்த பொருளை பிடித்தவாறே வயோதிபர் நிலை தடுமாறி ஏ9 வீதியில் வீழ்ந்துள்ளார்.
இந் நிலையில் குறித்த வீதுpயால் சென்றுகொண்டிருந்த ஊடகவியலாளர்கள் பேரூந்தை மறித:து சம்பவத்தை சாரதிக்கு தெரியப்படுத்தி பேரூந்தை தடுத்து நிறுத்தி அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.
இந் நிலையில் சாரதியும் நடத்துனரும் குறித்த வயோதிபரிடம் தாம் பிழையாக நடக்கவில்லை என தெரிவித்து மிகவும் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தினர்.
இதனால் அங்கிருந்தவர்கள் சாரதி நடத்துனருடன் வயோதிபருடன் மரியாதையான வார்த்தைகளை பயன்படுத்துமாறு தெரிவித்து முரண்பட்டனர்.
இதனால் கோபமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் பேரூந்தை மறித்த ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டதுடன் யாழ்பபாணத்திற்கு வந்து பார் எனவும் அச்சுறுத்தியிருந்தனர்.
இந் நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவத்தை கேட்டறிந்த நிலையில் வயோதிபர் தனக்கு நடத்தவற்றையும் அதனால் ஏற்பட்ட காயத்தினையும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு காட்டியிருந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் பேரூந்தை வழிமறித்து தம்மிடம் சம்பவத்தை தெரிவித்த ஊடகவியலாளரை திட்டியதுடன் வயோதிபரை குறித்த பேரூந்தில் ஏற்றிச்செல்லுமாறு பேரூந்து சாரதி நடத்துனரிடம் தெரிவித்து நடவடிக்கை எதுவும் எடுக்காது அங்கிருந்த செல்ல அனுமதித்தார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் செயற்பாட்டை அங்கிருந்தவர்கள் விமர்சித்ததை அவதானிக்க முடிந்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.