222 இலங்கையர்கள் வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பில் உயிரிழந்தாக தகவல்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக சென்ற 222 இலங்கை பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.


வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொதுமுகாமையாளர் மாதவ தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவிலேயே அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், சவூதி அரேபியாவில் மாத்திரம் 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “குவைட் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிலும் இலங்கை பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

கொலை, வாகன விபத்து, திடீர்மரணம், தற்கொலை போன்றவைகளால் இலங்கை பணியாளர்கள் உயிரிழக்கின்றனர்.

இந்த விடயத்தை கருத்திற் கொண்டு, இழப்பீடு பெற்றுக் கொடுப்பதற்கு அந்தந்த நாடுகளின் முகவர்களைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட பணியாளர்களுக்காக 5 இலட்சம் ரூபா வரையில் இழப்பீடு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனைத்தவிர, விபத்துக்கள் மற்றும் சித்திரவதைக்குள்ளாகி மேலும் சில இலங்கை பணியாளர்கள் அங்கவீனமடைந்துள்ளனர்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.