வன்னி உறவுகளுக்கு பொருட்கள் சேகரிப்பு

வன்னியிலுள்ள எமது உறவுகள் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ளனர்.

இரணைமடுக்குளம் திடீரெனத் திறக்கப்பட, ஊர்களுக்குள் வேகமாக வெள்ளம் புகுந்தமையால் மக்கள் உடுத்த ஆடைகளுடன் வெளியேறியிருக்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு வழங்குவதற்கு நல்ல நிலையில் உள்ள ஆடைகள், நுளம்பு வலைகள், மற்றும் உலருணவுப் பொருட்களை அகில இலங்கை சைவ மகா சபை சேகரித்துக்கொண்டிருக்கின்றது.

விரும்புகின்ற உறவுகள் பொருட்களை கொக்குவிலில் உள்ள சைவ மகா சபையின் அலுவலகத்தில் அல்லது தெல்லிப்பழையில் உள்ள மானிடம் அலுவலகத்தில் கையளிக்க முடியும்.

மேலதிக விபரங்களுக்கு சைவ மகாசபையின் பொருளாளர் அ. சிவானந்தன் (778999822) நிர்வாக உத்தியோகத்தர் கஜன் (770711152) ஆகியோரைத் தொடர்புகொள்ள முடியும்.

No comments

Powered by Blogger.