மலையக இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

மலையக இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று பிற்பகல் கைவிடப்பட்டது.
தோட்டத்தொழிலாளர்களின் நாளாந்த
சம்பளத்தினை 1000 ரூபாவாக அதிகரிக்கக்கோரி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கடந்த 5 நாட்களாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் இன்றைய தினம் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த கணேசன் உதயகுமார் பின்வருமாறு தெரிவித்தார்
மேலிடத்து உத்தரவின் மூலம் போராட்டத்தை மழுங்கடிக்க வைக்கலாம் என்று பார்த்தார்கள். ஆனால், தோட்டத்தொழிலாளிகளின் பிள்ளைகளை எப்பொழுதும் மழுங்கடிக்க முடியாது. அவர்கள் எடுத்த முடிவில் நிச்சயமாக வெற்றியைப் பெறுவார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இந்த போராட்டம் நான்கு பேரின் போராட்டம் அல்ல. இந்த போராட்டம் ஒட்டு மொத்த மலையக இளைஞர்களின் போராட்டம். நாங்கள் போராடிக்கொண்டிருப்போம். ஆனால், நாம் வாக்களித்தவர்கள் எம்மீது பார்வையைத் திருப்ப மாட்டார்கள். எதிர்வரும் 15 ஆம் திகதி பொங்கல் வரை நாம் ஒரு காலக்கேடை விடுக்கின்றோம். அதற்குள் எம் தாய், தந்தை, உறவுகளுக்கு அடிப்படைச் சம்பளம் 1000 ரூபா கொடுக்கா விட்டால், நாடளாவிய ரீதியில் 4 பேர் 4000 பேராக மாறி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்பதைக் கூறிக்கொண்டு இந்த உண்ணாவிரதத்தை கைவிடுகின்றோம்

No comments

Powered by Blogger.