40 அடி நீர் மட்டத்தைக் கடந்தது- இரணைமடுக்குளம்

கடும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுக்குளம் வழமைக்கு மாறாக அனைத்துக் கதவுகளும் முழுமையாக
திறக்கப்பட்ட நிலையிலும் மூன்றடி வான் பாய்கிறது.
இரணைமடுக்குளம் அபிவிருத்திச் செய்யப்பட்டு இரண்டு உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. குளத்திற்கு வருகின்ற நீரின் அளவை விட வெளியேறுகின்ற நீரின் அளவு குறைவாக இருப்பதாக நீர்ப்பாசனத்திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
36 அடி நீர் கொள்ளளவு கொண்ட குளமானது இன்று நாற்பது அடியாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வான்பாய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.