அரசுக்கு அறிவுரை கூறுகிறார் மகிந்த!

பன்னாட்டு நாணய நிதியத்தின் நிகழ்சி நிரலின் கீழ் செயற்படுவதை விடுத்து உண்ண வழியில்லாது வாழும் சாதாரண மக்கள் தொடர்பில் கவனம் செலுத்திப் பொருளாதார ரீதியில் தீர்மானங்களை எடுங்கள். இவ்வாறு அரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச.நாடாளுமன்றில் நேற்று ஐக்கிய தேசிய முன்னணியால் இடைக்காலக் கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மீதான விவாதத்தில் உரையாற் றும்போதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.
அவர் தெரிவித்தாவது-

நாங்கள் சூழ்ச்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றவில்லை. எவரும் தமது பக்கம் உள்ள கதிரைகள் மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டாம். மக்கள் எப்போது எழுச்சி அடைவார்கள் என்று கூற முடியாது. நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்ற தருணத்தில் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். தொழில்துறை வீழ்ச்சி, தொழில் இன்மை, கட்டுமானத் துறைத் வீழ்ச்சி, விவசாயத் துறை வீழ்ச்சி எனப் பல காரணங்களாலேயே நாம் ஆட்சியை ஏற்றுக் கொண்டோம்.

பொதுமக்களுக்குப் பல்வேறு மட்டத்தில் வரி விதிக்க்பபட்டிருந்தது. வரி விதிப்பால் மக்களைப் பிழிந்தெடுத்திருந்தனர். அதனால்தான் நாம் மானியம் கொடுத்தோம். எரிபொருள்களின் விலைகளைக் குறைத்தோம். பன்னாட்டுச் சந்தையில் மசகு எண்ணையின் விலை குறைந்திருந்தபோதும் இவர்கள் எரிபொருள்களின் விலையைக் குறைக்கவில்லை. இவர்கள் பன்னாட்டு நாணய நிதியம் உட்படப் பலரின் நிகழ்ச்சி நிரலின் கீழேயே செயற்படுகின்றனர். அதனால் மக்களுக்கு மானியங்களை வழங்குவதில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எரிபொருள்களின் விலைகளைக் குறைத்தோம். வற் வரியைக் குறைத்தோம். பொருளாதார ரீதியில் தீர்மானங்களை எடுக்கும்போது சாதாரண மக்களைக் கருத்தில் கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம். – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo  #Mavai Senathirajah #Maithripala Sirisena

No comments

Powered by Blogger.