அவசர உதவிகோரல் ஆதரவுக்கரம் நீட்டுவோம் வாருங்கள்!!

வன்னிமாவட்டம் மற்றும்  வடமராட்சி கிழக்கு கடும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது பல கிராமங்களில்  மீட்பு பணியில் மனிதநேயப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதோடு இடைத்தங்கல் முகாம்களை அமைத்து மக்களை பாதுகாத்து வருகின்றனர்


கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

வழமைக்கு மாறாக  225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றமையினால்  வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

ஆகவே அன்பான உறவுகளே எமது மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக உங்கள் கரங்களை பற்றிக்கொள்கின்றோம் உங்களால் இயன்றளவு பண உதவியை செய்து எமது மக்களின் துயர் களைய எம்மோடு கரம் கோர்க்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
உங்கள் உதவிகளை நேரடியாகவும் வங்கி ஊடாகவும் பங்களிக்கலாம் என்பதைத்தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ்முரசம் வானொலி
தொடர்புகளுக்கு 97192314

வங்கி இலக்கம்: Dnbnor;70740515819

No comments

Powered by Blogger.