வவுனியாவில் அன்னாசி செய்கை முன்னெடுப்பு

வவுனியாவில் அன்னாசி செய்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்தநிலையில், வவுனியா மாவட்டத்தில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் அன்னாசி செய்கை மேற்கொள்ளறப்படுகின்றது.
தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு ஊடுபயராக இந்த அன்னாசி செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
ஒரு பரப்பளவில் அன்னாசி செய்கை மேற்கொள்வதனூடாக சுமார் 50,000 ரூபாவினை வருமானமாக ஈட்ட முடியும்
என வவுனியமா மாவட்ட விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அன்னாசி செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
மரக்கரி செய்கையையும் விட அன்னாசி செய்கையூடாக அதிகளவில் வருமானத்தினை ஈட்டுவதாக விவசாயிகள்
கூறுகின்றனர்.

No comments

Powered by Blogger.