மட்டக்களப்பில் ‘கிராமசக்தி’ வேலைத்திட்டத்திற்கான செயலமர்வு

கிராமசக்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பிரதேச ரீதியில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது.ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இச்செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கிராம சக்தி வேலைத்திட்டம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தபபடும் கிராமங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன் ஆரம்ப நிகழ்வில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதம உள்ளகக்கணக்காளர் திருமதி இந்திரா மோகன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.சுதர்சன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதன் போது கிராம மட்டத்தில் நடைபெற்றுவரும் கிராம சக்தி மக்கள் சங்கங்களின் செயற்பாடுகள், திட்டத் தெரிவு, செயற்படுத்தல், எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 42 கிராம சக்தி மக்கள் சங்கங்கள் கம்பனிகளாகப் பதிவு செய்யப்பட்டு அவற்றுக்காக 10 லட்சம் ரூபா வீதம் நிதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து வாழ்வாதாரம், ஆற்றல் விருத்தி, உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

நாடளாவிய ரீதியில் 1000 கிராமங்களில் முன்னெடுக்கப்படும் வறுமையைத் ஒழிப்பதற்கான திட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 42 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 28 கிராமங்கள் வறுமைக் கிராமங்களாகவும் 14 கிராமங்கள் உற்பத்திக் கிராமங்களாகவும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo  #Mavai Senathirajah #Maithripala Sirisena

No comments

Powered by Blogger.