வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு ரிஷாட் பணிப்புரை

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்குமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


குறித்த மாவட்டங்களின் அரச அதிபர்களுடனும் அனர்த்த நிவாரண அதிகாரிகளுடனும் தொடர்புக்கொண்ட அமைச்சர், கடும் மழை, வெள்ளம் காரணமாக கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  தேவையான உதவிகளை உடனடியாக வழங்குமாறு இதன்போது ரிஷாட் பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நந்தன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு சென்றதை  தொடர்ந்தே அவர் இப்பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதேவேளை வெள்ளத்தின் காரணமாக விளங்குளம் பகுதியிலுள்ள 16 குடும்பங்கள், தங்களின் இருப்பிடத்தை இழந்து பிற இடங்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாவும், வவுனிக்குளத்தில் நன்நீர் மீன் வளர்ப்பில் ஈடுபடும் அம்பாள் குள மீனவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களின் வலைகள் வெள்ள நீரில் அள்ளுண்டு சென்றுள்ளதாகவும் நந்தன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தொண்டர் நிறுவனங்கள் அவசர உதவிகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo  #Mavai Senathirajah #Maithripala Sirisena

No comments

Powered by Blogger.