இயற்கை வஞ்சித்துள்ள பகுதிகள் எச்சரிக்கை!

* இரணைமடுச்சந்தியினூடாக குளத்தைப் பார்க்கப்போகும்போது அவதானம் தேவை. வீதியின் மேலால் தண்ணீர் பாய்கின்றன.


* இரணைமடுகுளம் 381/2 அடியை கடக்கிறது. பரந்தன், பன்னங்கண்டி, ஊரியான் மக்கள் நலன்புரி நிலையங்களில். அவதானம்.

* புதுக்குடியிருப்பு பரந்தன் வீதிப்பயணத்தில் அவதானம் தேவை. விசுவமடு கல்மடு குளங்கள் வான் பாய்கிறது.

* கிளிநொச்சி குளம் நிரம்பி.. நகருக்குள் புகுந்துள்ளதாம். கிளிநொச்சி கச்சேரிக்குப் பின்னாலுள்ள பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளது .

* மாங்குளம் சந்திப்பகுதிகளில் கடும் வெள்ளம்.

* முத்தையன்கட்டுக்குளம் வான் பாய்கிறது. மன்னகண்டல், பண்டாரவன்னி கிராமமக்கள் வெளியேறாதவண்ணம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

* புதுக்குடியிருப்பு நகர்ப்பகுதி உட்பட ஆனந்தபுரப்பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

* வட்டக்கச்சி இராமநாதபுரம் பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு. தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கல்.

No comments

Powered by Blogger.