கிளிநொச்சி மண்ணின் இந்நிலைக்கு யார் பொறுப்பு?

கிளிநொச்சி மண்ணில் மந்தை கண்டேன்
மந்தையுடன் மனிதத்தின் உச்சத்தையும் கண்டேன்

இவன் தந்தை உனக்கு வாக்களித்தான்
அதனால்தானோ இவனின்று மந்தை மேய்த்தான்

நாற்காலிக்கு சண்டையிடும் உங்களால்தான்
நான்கு கால் விலங்கு மேய்க்கின்றான்
இந்த பிஞ்சன்

கண்டேன் இந்த காட்சியை
வியர்த்தது என் கண்கள்
அந்நிமிடம் என்கண்முன் நீ நின்றிருந்தால்
உன்னை மேய்க்கவிட்டு பார்த்திருப்பேன்

நடந்து படித்தேன் என்று தேர்தல் மேடையில் கத்தி பலனில்லை
கால்நடையுடன் வாழுமளவிற்கு என் இனத்தை தள்ளினேன் என்று மார்தட்டுங்கள்

வெள்ளை வேட்டி உனக்கெதற்கு
வெள்ளாடுபோன்று காட்டுவதற்கா
கருப்பாடுகள் நீங்கள் என்பதை நாமறிவோம்
ஆடு மேய்ப்பவனுக்கு என்ன பதில் கூறபோகிறீர்கள்

நான் கிளிநொச்சி மைந்தன் என்று மார்தட்டாதே
இந்த படம் போதும் உன் மார்தட்டலிற்கு பதில் சொல்லும்

காட்சி கண்ட கவலையுடன் சொல்கிறேன்
நாசமாய் போவியலடா நீங்கள்
தேர்தல் காலங்களில் கொப்பி கொடுப்பது அல்ல அரசியல்
தேர்தலில் பின்னர் கல்வியை ஊட்ட என்ன செய்தீர்கள் என்பதை சிந்தியுங்கள்

பெற்றவனுக்கு சில வரிகள்

உன் காமம் தீர்ந்தது என்று மாத்திரம் எண்ணாதே
உன் பிள்ளை ஆடு மேய்க்கின்றான் என்று மார்தட்டவா போகின்றாய்
வைத்தியர், பொறியியலாளனாகும் எண்ணம் கொண்டவனாக இருக்கலாம் இவன்

நீ வீட்டிலிருந்து தின்பதற்கு இவன் ரோட்டில் ஆடு மேய்க்க வேண்டுமோ
உன் கொப்பன் ஆடு மேய்க்க விட்டிருந்தால் இவன் கவலை உனக்கு தெரிந்திருக்கும்

இதற்கு மேல் எழுத என்னிடம் வார்த்தை இல்லை
திருந்துங்கடா மானம் கெட்டவனுகளா
காட்சி கண்டதிலிருந்து, கண்கள் சிவந்துள்ளன
என் கண்ணில் பட்டுவிடாதீர்கள்
மந்தையை நீவிர் மேய்க்க நேரிடும்

-ஞா.சப்தசங்கரி-

No comments

Powered by Blogger.