கங்கணாவைப் பிரதியெடுக்கும் காஜல்

கங்கணா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியாகிப் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம் குயின். தென்னிந்திய மொழிகளில் இந்தப் படத்தை ரீமேக்
செய்யும் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் நேற்று தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளிலும் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தமிழில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ‘பாரீஸ் பாரீஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த பெண்ணாக இதில் காஜல் நடித்துள்ளார். ரீமேக் படங்களைப் பொறுத்தவரை மூலப் படத்தினை அப்படியே பிரதியெடுக்காமல் புதிய காட்சிகளை கதாபாத்திரங்களை உருவாக்கலாம். ஆனால் தற்போது வெளியாகியுள்ள டீசரில் குயின் படத்தின் பல காட்சிகளை அப்படியே உருவாக்கியிருப்பது தெரிகிறது.
தெலுங்கில் தமன்னாவும், மலையாளத்தில் மஞ்சிமா மோகனும், கன்னடத்தில் பரூல் யாதவ்வும் நடித்துள்ளனர். மலையாள வெர்ஷனை நீலகண்டா இயக்க, தெலுங்கு வெர்ஷனை பிரசாந்த் வர்மா இயக்குகிறார்.
கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைக் காட்டிலும் தமிழ், தெலுங்கு வெர்ஷன் டீசர்களுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் இதன் ட்ரெய்லர், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன.

No comments

Powered by Blogger.