காதலர் தினத்தில் களமிறங்கும் ஷாலினி

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. தெலுங்கில் வெளியான அப்படம் தென்னிந்தியத் திரையுலகம் முழுக்க கவனம் பெற்றது. அதன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் நன்கு
அறிமுகமான ஷாலினி, நடிகையர் திலகம் படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தாலும் கதாநாயகியாகக் களம் காண்பது எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் காதலர் தினத்தைத் தேர்வு செய்துள்ளனர் 100 % காதல் படக்குழுவினர்.
தெலுங்கில் வெளியான 100% லவ் படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சந்திரமௌலி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்கிறார். தம்பி ராமையா, தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குடும்பக் கதைக்குள் காதலை இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி கவனம் பெற்றது. தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளதால் விரைவில் இதன் ட்ரெய்லர் வெளியாக உள்ளது.
இந்தப் படம் தவிர ஜீவாவுக்கு ஜோடியாக ஷாலினி நடித்துள்ள கொரில்லா படத்தின் பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அப்படமும் வெளியீட்டிற்குத் தயாராகிவருகிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படமும் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.