வடக்கு மாகாண சபை எதை­யும் வெட்டி வீழ்த்­தி­ய­தாக அறி­யேன் – சி.வி.கே.

வடக்கு மாகாண சபை­யின் 134 அமர்­வு­க­ளில் 132 அமர்­வு­க­ளுக்கு தலைமை தாக்­கி­யுள்­ளேன்.  ஆனால் என்­னவோ அங்கு எவை­யும் வெட்டி வீழ்த்­தப்­பட்டதாகஎனக்­குத் தெரி­ய­வில்லை.


இவ்­வாறு வடக்கு மாகாண சபை­யின் அவைத்­த­லை­வர் சி.வி.கே. சிவ­ஞா­னம் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பாண மாவட்ட அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளின் இணை­யத்­தின் வரு­டாந்­தப் பொதுக்­கூட்­ட­மும், மனித உரி­மை­கள் செய­ல­மர்­வில் கலந்து கொண்­ட­வர்­க­ளுக்­கான சான்­றி­தழ் வழங்­கும் நிகழ்­வும் நேற்று யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெற்­றன. அந்த நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது-:

வடக்கு மாகாண சபை­யைப் பற்­றிப் பேசி­னால் அது கஸ்­ட­மான விட­யம்­தான். நாம் வெற்­றி­ய­டைந்­து­விட்­டோம் என்று கூறிப் பீற்­றிக்­கொள்­ளும் நிலமையை கடந்த 5 ஆண்­டு­க­ளில் எட்­ட­வில்லை. அவைத் தலை­வர் என்ற வகை­யில் சபையை முரண்­பா­டு­க­ளுக்கு உள்­ளேயே ஒரு உடன்­பாட்­டோடு நிறைவு செய்­துள்­ளேன்.

ஒரு கால­கட்­டத்­தில் இந்த மண்­ணில் அர­சி­யல் வாதி­கள் செயற்­ப­டாத காலத்­தில் மக்­க­ளு­டைய அபி­லா­சை­களை, எண்­ணக்­க­ருக்­களை கருத்­தில் கொண்டு போர் நிலை­க­ளில் இருந்து மக்­களை பாது­காக்­கும் முயற்­சி­க­ளில் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள் ஈடு­பட்­டி­ருந்­ததை நான் நினைத்­துப் பார்க்­கின்­றேன். இந்த நிறு­வ­னங்­கள் மக்­க­ளு­டைய தேவை­க­ளுக்­கா­கச் செயற்­பட்ட காலம் அது. பின்­னர் அர­சி­யல்­வா­தி­க­ளு­டைய பிர­சன்­னத்­தின் பின்­னர் அந்­தக் கோணத்­தி­லான செயற்­பாடு சற்­றுக் குறைவு என்று நினைக்­கின்­றேன். அது தவ­றா­க­வும் இருக்­க­லாம்.

எங்­கள் நிறு­வ­னங்­கள் எங்­கள் மக்­க­ளின் அன்­றா­டப் பிரச்­சி­னை­களை, அடிப்­ப­டைத் தேவை­களை நிறைவு செய்­யும் அரும் பணி­யைச் செய்­கின்­றன. மனித உரி­மை­கள் என்­பது இப்­போது பர­வ­லா­கப் பேசப்­ப­டு­கி­றது. நான் என்­னு­டைய உரி­மை­க­ளு­டன் இந்த மண்­ணில் வாழ­வேண்­டும் என்ற உரி­மை­யைத்­தான் நாங்­கள் கேட்­கின்­றோம். இப்­போது மனித உரி­மை­க­ளின் வலு­வாக்­கம் தேவைப்­ப­டு­கின்­றது – என்­றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

No comments

Powered by Blogger.