விஜ­ய­க­லா­வுடன் காதல்- கொந்­த­ளிக்­கும் வீர­வன்ஸ

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்பை ஆத­ரித்­துப் பேசிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுக்கு மீண்­டும் இரா­ஜாங்க அமைச்­சுப் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. அதை ஒரு­போ­தும் ஏற்க முடி­யாது என்று கொந்­த­ளித்­துள்­ளார் மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான விமல் வீர­வன்ச.


சிங்­கள மொழி ஊட­கம் ஒன்­றுக்­குக் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார்.

வடக்கு, கிழக்­கில் புலி­கள் அமைப்­பின் கை மீண்­டும் ஓங்க வேண்­டும் என்று பகி­ரங்­க­மாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தெரி­வித்­தி­ருந்­தார். அதற்கு எதி­ராக நாடா­ளு­மன்­றில் நாம் குரல் கொடுத்­தோம்.

அதை­ய­டுத்­துத் தான் வகித்த அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் வில­கி­னார். புலி­களை ஆத­ரித்­த­மைக்­காக குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வால் அவர் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­டுப் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ருக்கு எதி­ராக நீதி­மன்­றில் வழக்கு விசா­ரணை நடை­பெ­று­கின்­றது.

தற்­போது ரணில் அர­சில் அவ­ருக்கு இரா­ஜாங்க அமைச்­சுப் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. அதை ஒரு­போ­தும் அனு­ம­திக்க முடி­யாது. அவ­ருக்கு வழங்­கப்­பட்ட இரா­ஜாங்க அமைச்­சுப் பத­வியை அரச தலை­வர் மீளப் பெற வேண்­டும். இல்­லை­யேல் அவர் மீண்­டும் பதவி வில­கும் நிலையை ஏற்­ப­டுத்­து­வோம் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ஸ தெரி­வித்­துள்­ளார்.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

No comments

Powered by Blogger.