மஞ்சு வாரியருக்கு ஜோடியாக விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி மலையாளத்தில் அறிமுகமாகும் ‘மார்கோனி மாதாயி’ திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக
மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்று சொன்னால் அது அபத்தமாகிவிடும். அங்கு மஞ்சு வாரியர் விஜய் சேதுபதியைவிட பெரிய ஸ்டார். எனவே, விஜய் சேதுபதி என்ற கலைஞனின் திரைப்படத்தில் இருக்கும் கேரக்டர்களை உயிரோட்டமானதாக மாற்றுவதற்கு மஞ்சு வாரியர், நடிகர் ஜெயராம் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர் என்று சொல்ல வேண்டும்.
கனமான கதைகளையும், அழுத்தமான கேரக்டர்களையும் கொண்ட படைப்புகளை உருவாக்கும் திரையுலகங்களின் பட்டியலில் மலையாள சினிமாவுக்கு முக்கிய இடம் உண்டு. அப்படிப்பட்ட இடத்துக்கு விஜய் சேதுபதி செல்வார் என்று பல காலமாக எதிர்பார்க்கப்பட்டாலும், சமீப காலமாக வெளிப்படையாகவே ‘மலையாள சினிமாவுக்கு செல்ல வேண்டும்’ என்ற தனது ஆசையை விஜய் சேதுபதி வெளிப்படுத்தியதால், சீக்கிரமே நடைபெற்றுவிட்டது அவரின் மலையாள அறிமுகம்.
இயக்குநர் சனில் கலதில் இயக்கும் மார்கோனி மாதாயி திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இதுவரை தமிழில்கூட விஜய் சேதுபதி ஏற்று நடிக்காத ஒரு கேரக்டரைக் கொடுத்ததால்தான் அவர் இத்தனை சீக்கிரம் கமிட் ஆகியிருக்கிறார் என்கின்றனர்.
Powered by Blogger.