07 வயதில் அவுஸ்திரேலிய அணியின் சம தலைவனாகும் ” ஆர்ச்சி சில்லர் ”

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்ற 7 வயது சிறுவனான ஆர்ச்சி சில்லரின் கனவு இவ்வருட நத்தார் பண்டிகையில் நனவாகும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் அவுஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராக களமிறங்கவுள்ளார்.

நத்தார் பண்டிகையின் மறுநாள் கைவிசேட திருநாள் என்பதுடன் அந்த நாளில் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கப்படுவது வரலாற்று பாரம்பரியமாகும்.

அந்த வகையில் இவ்வருட கைவிசேட திருநாள் டெஸ்ட் போட்டி 7 வயது சிறுவனான ஆர்ச்சி சில்லருக்கான கைவிசேடமாக அமையவுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் அவுஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராகவும், நதன் லியோனுடன் சக சுழல்பந்துவீச்சாளராகவும் விளையாடவுள்ளார்.

இந்திய அணித்தலைவரான விராட் கோஹ்லியின் விக்கெட்டே தனது இலக்கு என ஆர்ச்சி சில்லர் கூறுகிறார்.

இதேவேளை இந்த சிறுவனுக்காக தனது விக்கெட்டை தரைவார்க்கவும் தயாராக இருப்பதாக விராட் கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.

இதய நோயாளியான ஆர்ச்சி சில்லருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அடுத்த வாரம் தீவிர அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில் அவரது கனவை நனவாக்க அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் மனிதநேயமிக்க தீர்மானமொன்றை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி தலைவராக உயர வேண்டும் என்ற இந்த சிறுவனின் கனவை நனவாக்க எதிர்வரும் இந்தியாவுக்கு எதிரான கைவிசேட போட்டியை அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது.

ஆர்ச்சி சில்லர் அவுஸ்திரேலிய அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டு அவர்களினதும், உலக ரசிகர்களினதும் மனதை கவர்ந்துள்ளார்.

உடல்நலை பாரதூரமானதாக இருந்தாலும் அதில் துளியேனும் தென்படாமல் கம்பீரமாக விளையாடத் தயாராகும் இந்த சிறுவன் போற்றுதலுக்குறியவன்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

No comments

Powered by Blogger.