புதையல் தோண்டிய 25 பேர் கைது

நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது   புதையல்  அகழ்வில் ஈடுபட்ட  25  பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.


குறித்த கைது நடவடிக்கைகள் நேற்று வெள்ளி மற்றும் இன்றும் இடம் பெற்றுள்ளதுடன், 19  வயதிற்கும் 75 வயதிற்கும் இடைப்பட்ட சுமார்  25 சந்தேக நபர்களே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி சுற்றி வளைப்பு நடவடிக்கைகள் வாழைச்சேனை , அல்பிட்டிய மற்றும் அதிமலை ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.

வாழைச்சேனை - வனப்பகுதியல் புதையல் அகழ்வு தொடர்பாக  பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் 15 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து  புதையல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் , பூஜைப்பொருட்கள் உட்பட வாகனங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், சந்தேக நபர்கள் 19 வயதிற்கும் 75 வயதிற்கும் இடைப்பட்ட மாத்தலை , கொகரல்ல , பகமூண , மாகடவெவ , மெதிரிகிரிய , குன்னாபான , திய சேனபுர , வெயாங்கொட , கேகாலை , சீதவை மற்றும் புலாவலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேற்படி சந்தேக நபர்கள் நேற்று  பொலிசாரால் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன்,  மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil #Srilanka #Jaffna #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.