காணி விடுவிப்பைத் துரிதப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்

வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படுவதற்கு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வது
அரசாங்கத்தின் பொறுப்பாகும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 
வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகளில் காணி உறுதிப்பத்திரங்கள் உள்ள தனியார் காணிகளை முதலில் விடுவிப்பதாக இராணுவம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் பணிப்புரையின்படி இம்மாத இறுதிக்குள் அனைத்து தனியார் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். 
அத்துடன் நாட்டில் அரசியல் சிக்கல் நிலை ஏற்படுவதற்கு முன்னர் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும் என வலியுறுத்திய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இருக்கவில்லை. எனவே அவர் நாடு திரும்பியதும் பிரதமருடன் கலந்துரையாடி இவ்விடயம் தொடர்பில் சாதகமான நிரந்தர தீர்வொன்றை வழங்குவதாக ஜனாதிபதி வாக்களித்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.