களத்தில் மீண்டும் தோனி

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் மகேந்திர சிங் தோனி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 தொடர் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடருக்கான இந்திய அணியை இந்திய தேர்வுக் குழு  (டிசம்பர் 24) தேர்வுசெய்து அறிவித்துள்ளது. 15 பேர் அடங்கிய இந்த அணியில் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் தோனி இடம்பெறாத நிலையில் நியூசிலாந்து தொடரில் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் தோனியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
டி-20 அணி விவரம்:
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன், கே.எல்.ராகுல், ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், கேடார் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, குருனல் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அஹமத் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மகேந்திர சிங் தோனி விக்கெட் கீப்பராகச் செயல்படவுள்ள நிலையில், ரிஷப் பந்த் அணியில் தேர்வுசெய்யப்படவில்லை. சென்ற மாதம் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷப் பந்த் இடம்பெற்றிருந்தார்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில், மகேந்திர சிங் தோனியுடன், ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, முகமது ஷமி, ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

No comments

Powered by Blogger.