அனுஷ்காவுடன் டேட்டிங்கா? பிரபாஸ் பதில்!

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியின் 6ஆவது சீசனில் பாகுபலி படத்தின் இயக்குநர்
எஸ்.எஸ்.ராஜமௌலி, நடிகர்கள் பிரபாஸ், ராணா டகுபதி ஆகியோர் கலந்துகொண்டனர். கலகலப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர்களின் காதல், டேட்டிங், நட்பு குறித்து சுவாரஸ்யமாக உரையாடினர்.
பாகுபலி படம் ஆரம்பமானது முதலே பிரபாஸும் அனுஷ்கா ஷெட்டியும் சேர்ந்து டேட்டிங் செல்கின்றனர் என்று தெலுங்கு திரையுலகில் பரவலாகப் பேசப்பட்டது. இன்னும் கூட உயிர்ப்புடன் இருக்கும் அந்த யூகத்தை மறுத்துள்ளார் பிரபாஸ். இரண்டு பேர் இரண்டு வருடங்களாக இணைந்து நடித்தால் டேட்டிங் செல்வது நடக்கும் ஆனால் எங்கள் விஷயத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நிகழ்ச்சியின் போது பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
பிரபாஸ், ராணா இருவரில் யார் முதலில் திருமணம் செய்துகொள்வார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜமௌலி, “பிரபாஸ் மிகவும் சோம்பேறி. எனவே அவர் திருமணம் முடிக்கமாட்டார். பெண் பார்க்க வேண்டும், பத்திரிகை அடிக்க வேண்டும், நிகழ்விற்கு அனைவரையும் அழைக்க வேண்டும் என்று பெரிய செயல்முறைகள் இருப்பதால் பிரபாஸ் முதலில் திருமணம் செய்யமாட்டார்” என்று கூறியுள்ளார்.
ராணா பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப் உடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்தார். அதோடு அனுஷ்கா ஷெட்டியை தெலுங்கு திரையுலகின் கவர்ச்சிகரமான நடிகை என்று குறிப்பிட்டுள்ளார். ராணாவின் இந்தக் கருத்தை பிரபாஸும் வழிமொழிந்தார்.
பாகுபலி படத்தை பாலிவுட் நடிகர்களை வைத்து எடுத்தால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு தீபிகா படுகோனை தேர்ந்தெடுப்பேன் என்று கூறிய ராஜமௌலி ராணா, பிரபாஸ் கதாபாத்திரத்தில் அவர்களையே நடிக்கவைப்பேன் என்று கூறினார்.

No comments

Powered by Blogger.