முல்லைத்தீவில் 52.14 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 52.14 ஏக்கர் தனியார் காணிகள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக
முல்லைத்தீவு படைப்பிரிவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள 52.14 ஏக்கர் காணிகளில் 33.05 ஏக்கர் பொதுமக்கள் காணிகளும், 11.59 ஏக்கர் அரச காணிகளும், 7.5 ஏக்கர் வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கு உரிய காணிகளும் உள்ளடங்குகின்றன. 
யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமிருக்கும் தனியார் காணிகள் அனைத்தும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். 
இந் நிலையிலேயே குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.