கிளிநொச்சி வெள்ள பாதிப்பை நாமல்-அங்கஜன் நேரில் பார்வையிட்டனர்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் அங்கஜன்
இராமநாதன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் சென்ற அவர்கள் அங்குள்ள நிலமையை ஆராய்ந்தனர்.
வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளான மக்கள் கிளிநாச்சி பாரதி வித்தியாலயம் மற்றும் பன்னங்கண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் அம்மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது மக்கள் தாம் தொடர்ச்சியாக எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்  எடுத்துக்கூறினர்.
கடந்த சில நாட்களாக நாட்டில், குறிப்பாக வடக்கு கிழக்கில் பெய்து வரும்  அடைமழை மற்றும் வெள்ளம்  காரணமாக வடக்கில் சுமார் 75ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.