சுமந்திரன்- ஐயா! இந்த வெள்ள நிலைமை குறித்து ஒரு அறிக்கை விட்டால் என்ன?

சம்பந்தர் - என்ன தம்பி புரியாமல் பேசுகிறீர். நான் தீபாவளியில் மட்டும் “அடுத்த தீபாவளிக்குள் தீர்வு வரும்” என்று அறிக்கைவிடுவதை தவிர வேறு எதற்கு அறிக்கை விட்டிருக்கிறேன்?


சுமந்திரன் - அது உண்மைதான் ஐயா. ஆனால் நாமல் ராஜபக்சகூட போய் மக்களுடன் சேர்ந்து படம் போடுகிறார். நாங்கள் ஒரு அறிக்கைகூட விடவில்லை என்றால் அப்புறம் எப்படி தேர்தலுக்கு மக்களிடம் பொக முடியும்?

சம்பந்தர்- அந்த தம்பி ஏன் கிளிநொச்சிக்கு போகுது? ஏன் தமிழ் மக்களை எல்லாம் கட்டிப்பிடித்து படம் பொடுகுது?

சுமந்திரன்- அதுதான்யா பெரிய பிரச்சனையாக இருக்குது? பேஸ்புக்கில் எல்லாம் சம்பந்தர் அய்யா எங்கே என்று கேட்டு கிழிக்கிறாங்க.

சம்பந்தர்- ஆமாம். நானும் கேள்விப்பட்டேன். பிரைம்மினிஸ்டருக்கு சொல்லி நாமல் ராஜபக்சவை வடபகுதிக்கு போவதை தடை செய்ய முடியாதா?

சுமந்திரன் - அதெப்படி ஐயா? அது கஸ்டம். ஆனால் பேசாம பேஸ்புக்கை தடை செய்யச் சொல்லி கேட்டா என்ன?

சம்பந்தர் - பேஸ்புக்கை தடை செய்யுறதா இருந்தா மகிந்த ராஜபக்சவும் சம்மதிப்பார். ஆனால் நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளாதே?

சுமந்திரன்- அப்படியென்றால் இப்ப இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது ஐயா?

சம்பந்தர் - நாங்க சொல்லித்தான் அரசாங்கம் பத்தாயிரம் ரூபா கொடுக்க தீர்மானித்துள்ளது என்று கூறிப் பார்ப்போமே?

சுமந்திரன் - அதுக்கு கஜேந்திரகுமார் ஆட்கள் “ தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரித்த பிரதமர் நுவரெலியாவில் ஓய்வெடுக்கிறார். ஆனால் தமிழ் மக்கள் வெள்ளத்தில் மூழ்கிறார்கள்” என்று சொல்லி திரிகிறார்கள் ஜயா.

சம்பந்தர் - வடமராட்சியில் இருந்து பல இளைஞர்கள் நேரில் சென்று உதவி வருவதாக அறிந்தேன். அவர்கள் எல்லாம் நீர் சொல்லித்தான் போயிருக்கிறார்கள் என்று அறிக்கை விட்டால் என்ன?

சுமந்திரன் - விடலாம்தான். ஆனால் அவங்கள் ஒருமாதிரியான ஆட்கள். அப்பறம் வடமராட்சிக்கு போகும்போது செருப்பால் அடிப்பாங்கள் ஐயா.

சம்பந்தர் - அப்ப என்னதான் செய்வது? சிறீதரன் வெள்ளத்தில வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு படம் போட்டாரே? அதுவும் சரிவர வில்லையா?

சுமந்திரன் - அதுவும் எடுபடவில்லை ஐயா. இப்பெல்லாம் முன்னாடி மாதிரி மக்களை ஏமாற்ற முடியவில்லை ஐயா.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.