கூட்டமைப்பின் உருவாக்கம் புலிகளுடன் செய்து கொண்ட டீல்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது தமிழீழ விடுதலை புலிகளுடன் தமிழ் அரசியல் தலைமைகள் செய்து கொண்ட டீலின் ஊடானதே என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே. சயந்தன் தெரிவித்தார்.


அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற “சொல்விற்பனம்” எனும் விவாத அரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரான நிகழ்வுகளை தொடர்ச்சியாக பார்த்தால் ஜனநாயக ரீதியான தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் சுட்டுப்படுகொலை செய்யபப்ட்டனர். அந்த வரிசையில் இறுதியாக உயிரிழந்தவர் கலாநிதி நீலன் திருச்செல்வம், அதற்கு முன்னர் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை அதற்கு முன்னர் யாழ்.மாநகர சபை முதல்வர் சிவபாலன் , அதற்கு முன்னர் சரோஜினி யோகேஸ்வரன் என தொடர்ச்சியாக கொல்லப்பட்டார்கள்.

அதனால் தேர்தலில் போட்டியிட்டு கொல்லப்படாமல் இருக்க வேண்டும் எனில் விடுதலைப் புலிகளுடன் டீலுக்கு போக வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையில் எல்லா கட்சிகளையும் சேர்த்து ஜனநாயக குரலாக இருப்போம் எனும் உத்தரவாதம் அளிக்க வேண்டி இருந்தது.


அதேபோன்று புலிகளுக்கும் ஒரு தேவை இருந்தது. தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு இருந்தார்கள். அதனை சர்வதேசம் ஏற்க தயாராக இருக்கவில்லை. அதனால் புலிகளுக்கு மக்களிடம் ஒரு ஆணை பெற வேண்டிய தேவை ஏற்பட்டது.

அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என அங்கீகரிக்க வேண்டும் என கோரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.

அதன் பின்னரே விடுதலைப்புலிகளை சர்வதேச சமூகம் அங்கீகரித்தது. அதுவே இங்கே நடந்தது. கட்சிகளுக்குள் தாங்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என எவ்வாறு தான் இயங்க வேண்டும் அதன் இயங்கு தளம் என்ன, அதன் செல் நெறி பற்றிய எந்த உடன்பாடும் அங்கு இருக்க வில்லை – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.