கரைச்சி மக்களுக்கு நோர்வே தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குழு நிவாரண உதவி!

நோர்வே வாழ் மக்களின்  பங்களிப்பின் ஊடாக வன்னியில்  கிடைத்த உதவிகள் மக்களின் உடனடித்தேவைகளை பூர்த்தி
செய்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது என்பதை அகமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றனர் குழமம். இவ் வேளையில் மக்களின் உடனடித்தேவைகளை நிவர்த்தி  செய்யும் மனிதநேயப்பணியில் களத்தில் நின்று பணியாற்றிக்கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் களப்பணியாளர்களை நோர்வே வாழ் மக்கள் பாராட்டுகின்றோம்.
எத்தனை இடர்கள் எம் இதயத்தை உடைத்துப்போட்டாலும் எல்லாம் கடந்து நாம் நிமிர்ந்து நிற்போம் என்பதற்கு ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு வடிவில் எமக்கு உணர்த்தி நிற்கின்றது.
அந்த வகையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரைச்சி பிரதேச சபை பகுதி மக்களுக்கு இன்று உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.இந்த உதவியானது நோர்வே தமிழர் ஒற்றுமை அபிவிருத்தி குமுகத்தின் ஊடாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வழங்கியுள்ளது.
Powered by Blogger.