ஆழிப்பேரலை நினைவாக- சிறுவர் பூங்கா திறப்பு!

ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட மக்களின் 14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் இன்று நடைபெற்றது.


ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் உறவினர்களால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கூடியிருந்த மக்கள் தங்கள் உறவுகளுக்காக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பொது நினைவு கல்லறைக்கு புதுக்குடியிருப்பு வணிகர் சங்கத்தலைவர் எஸ்.செல்வச்சந்திரன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
சுனாமி நினைவாலய வளாத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் குறித்து ஒதுக்க்பபட்ட நிதியில் அமைக்கப்பெற்ற சிறுவர் பூங்கா ஒன்று ஆழிப்பேரலையின் 14ஆம் ஆண்டு நினைவாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் ம.பிரதீபன்,பிரதேச சபைத் தவிசாளர் செ.பிறேமகாந் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆலய குருக்கள் ,அருட்சகோதரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
வன்னிக்குறோஸ் அமைப்பின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு வணிகர் சங்கம், அழககசங்கம், முச்சக்கரவண்டிசங்கம், பனை தென்னைவள அபிவிருத்தி சங்கம் ஆகியனவற்றின் ஒத்துழைப்பு வழங்கினர்.

No comments

Powered by Blogger.