ஆழிப்பேரலையில் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி!

ஆழிப் பேரலையில் உயிரிழந்த மாணவர்களுக்கு முல்லைத்தீவு – கள்ளப்பாடு, அ.த.க பாடசாலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆழிப்பேரலையில் உயிர் நீத்த மாணவர்களின் நினைவாக கட்டப்பட்டுள்ள தூபிக்கு மலர் தூவி தீபங்களேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்ற 68 மாணவர்கள் ஆழிப்பேரலையில் உயிரிழந்தனர்.
நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன், வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.உ.புவனராஜா , கரைதுறைப்பற்றுக் கோட்டக்கல்வி அதிகாரி இ.ஸ்ரீபுஸ்பநாதன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், குடியேற்ற உத்தியோகத்தர் சோ.சேந்தன் ஆகியோருடன், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Powered by Blogger.