சி.வி. விக்னேஸ்வரன் அவர்களால் முன்னால்  மாணவர் ஒன்றியத் தலைவர்  கி.கிருஷ்ணமீனன் ஊடாக நிவாரண உதவி!

26.12.2018 இன்று வன்னி பெருநிலப்பரப்பில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால்  பாதிப்புற்ற மக்களுக்கு  முன்னால் வடமகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள்  1 500 000/=. பதினைந்து இலட்சம் ரூபா
பெறுமதியான  உலர்உணவு, அத்தியவசியப்பொருட்கள் என்பன இளைஞர்கள், யாழ் பல்கலைக்கழக முன்னால்  மாணவர் ஒன்றியத் தலைவர்  கி.கிருஷ்ணமீனன் ஆகியோர்  ஊடாக வழங்கியுதவினார்.

இதில்கிளிநொச்சி,
விசுவமடு, மயில்வாகனபுரம் அரசினர்.தமிழ்கலவன் பாடசாலையில் இருக்கும் 145 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளும், உடைகள், நுளம்புவலை என்பன வழங்கியுதவினார்கள். தொடர்ந்து
முல்லைத்தீவு  மாங்குளம் மகா வித்தியாலயத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புற்ற கல் குவாரியில் 65 குடும்பங்களுக்கும் அதனைத் தொடர்ந்து பரந்தன் உமையாள் புரத்தில் 240 குடும்பங்களுக்கும்
இரணைமடு பகுதியில் 24 குடும்பங்களுக்குமாக  முன்னாள் வடமகாண முதலமைச்சர்  சி.வி விக்னேஸ்வரன் அவர்களும் ஏற்றம் பவுன்டேஷன் ஏற்பாட்டிலும் உலர் உணவுப்பொதிகளும், உடைகள் என்பனவும் யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஒன்றியத்தின் தலைவர்  மற்றும் கிளிநொச்சி பல்கலைக்கழக மற்றும் இளைஞர்கள்   ஊடாக வழங்கி வைக்கப்பட்டது...
Powered by Blogger.