வடமாகாணத்தில் சீரற்ற காலநிலை 86551 பேர் பாதிப்பு

வடமாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக தற்போது 27ஆயிரத்து 668 குடும்பங்களைச் சேர்ந்த 86 ஆயிரத்து 551 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்து நிலையம் தெரிவித்துள்ளது.  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்காக நேற்றைய தினம் கொழும்பில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டமே சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் ஆயிரத்து 11 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து 444 பேர் 12 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 625 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 108 பேர் 9 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய நடமாடும் சமையலறைகளும், மலசல கூடங்களும் அமைக்கப்படவுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.