சோனிக் ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

தங்கள் நாட்டின் அதிநவீன ஹைப்பர் சோனிக் ஏவுகணையின் இறுதிக்கட்ட சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு
பெற்றதாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறையில் உள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளால் கண்டுபிடித்து அழிப்பதற்கு இயலாத அளவுக்கு இது நவீனமானது என தெரிவிக்கப்படுகின்றது.
உலகிலேயே இந்த புதுரக தந்திரோபாய முக்கியத்துவம் மிக்க ஆயுதத்தை தயாரிக்கும் முதல் நாடு ரஸ்யாதான் எனவும் புட்டின் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்புப் படைகளுக்கும், நாட்டுக்கும் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு எனத் தெரிவித்துள்ள அவர் இந்த புதுமையான அமைப்பு அணு ஆயுதங்களை சுமந்து செல்ல வல்லது எனவும், இது அடுத்த வருடம் ராணுவ சேவையில் இணையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் புதிய ஆயுதம் ஒரு நெருப்பு பந்து போல தாக்கும் எனத் குறிப்பிட்டுள்ள புட்டின் ஒலியின் வேகத்தைப் போல 10 மடங்கு வேகமாகச் செல்லக்கூடிய இந்த ஏவுகணை, எதிர்கொண்டு அழிக்கும் ஏவுகணைகளை ஏமாற்றும் வகையில், அதிவிரைவாக திசையை மாற்றி மாற்றிப் பறக்கும் திறன் படைத்தது எனவும் தெரிவித்துள்ளார்.
  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.