நோர்வே தமிழ் மக்களினாலும் அமைப்புகளினாலும் வழங்கிய வெள்ள நிவாரணம்!

நோர்வே தமிழ் மக்களினாலும் அமைப்புகளினாலும் வழங்கிய வெள்ள நிவாரணத்திற்கான பங்களிப்பில் இதுவரை வவனியா பரசங்குளம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் நெடுங்கேணி மகர இலுப்பங்குளம் ஆகிய பகுதி மக்களுக்கு உலர் உணவுப்பொதிகளும் கிளிநொச்சி உருத்திரபுரம் மக்களுக்கு சமைத்த உணவும் படுக்கைகளுக்கான பாய்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரின் மனிதநேயச்செயற்பாட்டாளர்களையும்   மக்களின் உடனடித்தேவையை பூர்த்திசெய்வதற்கு உதவிகளை மனமுகந்து அளித்த அளித்துக்கொண்டிருக்கின்ற நோர்வே வாழ் தமிழ் மக்களையும் அமைப்புக்களையும் தமிழ்முரசம் வானொலி அன்புக்கரம் கொண்டு பற்றிக்கொள்கின்றது.
Powered by Blogger.