சுமந்திரன் பதவியை நிராகரித்தது உண்மையா?சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த பிரபலத்தினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்தக் கோரிக்கையை நிராகரித்த சுமந்திரன், தனது ஆலோசனையின் கீழ், தனது செயலாளர் மூலம் அமைச்சின் வேலைகளை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு டக்ளஸ் தேவானந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் அதனை நிராகரித்துள்ளார்.

தான் அமைச்சு பதவியை ஏற்றுக் கொண்டால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அவசியத்திற்கமைய செயற்பட நேரிடும் என டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.