திடீரென தீப்பற்றிய புத்தகக் கடை 

புத்தக கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான புத்தகங்களும், பொருள்களும் தீக்கிரையாகின.


இந்தச் சம்பவம் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் நடந்துள்ளது.
புத்தகக் கடையை உரிமையாளர் வழமைபோன்று நேற்று மாலை பூட்டிவிட்டுச் சென்றார். இன்று அதிகாலை கடையில் திடீரென தீப்பற்றியுள்ளது.
தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அங்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் அங்கிருந்த பொருள்களும், கடையும் முற்றுமுழுதாகத் தீக்கிரையாகின.
தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.