திட்­டத்தை நிறைவேற்ற அர­சுக்­குத் தொடர்ந்து அழுத்­தம் கொடுப்­போம் -சம்­பந்­தன்

ஐக்­கிய தேசிய முன்­னணி தலை­ மை­யி­லான அர­சின் ஊடாக புதிய அர­ச­மைப்பை நாடா­ளு­மன்­றத்­தில் கொண்­டு­வந்து நிறை­வேற்­று­வதே எமது குறிக்­கோ­ளாக இருக்­கின்­றது.


இதற்­கா­கவே மைத்­திரி – மகிந்த கூட்­ட­ணி­யின் ‘ஒக்­ரோ­பர் அர­சி­யல் சூழ்ச்­சியை’ நாம் ஓர­ணி­யில் நின்று தோற்­க­டித்­தோம்.
நாட்­டில் 50 நாள்­கள் நீடித்த சர்­வா­தி­கார ஆட்­சிக்கு முடிவு கட்­டி­னோம். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.
‘புதிய அர­ச­மைப்­பின் ஊடாக தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சி­யல் தீர்­வைக் காண்­பதே எமது திட்­டம். இந்­தத் திட்­டம் நிறை­வேற அர­சுக்­குத் தொடர்ந்து அழுத்­தம் கொடுப்­போம்’ என­வும் அவர் உறு­தி­ப­டத் தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சுக்கு நிபந்­த­னை­களை முன்­வைக்­கா­மல் நாம் ஆத­ரவு வழங்­க­வில்லை. அவர்­க­ளு­டன் பல சுற்­றுப் பேச்­சுக்­களை நடத்­தி­னோம். பல நிபந்­த­னை­களை முன்­வைத்­தோம். இணக்­கப்­பாட்­டின் அடிப்­ப­டை­யி­லேயே நாம் ஆத­ரவு வழங்­கி­னோம்.
புதிய அர­ச­மைப்பு நிறை­வேற்­றம், ஐ.நா. தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தல், காணி­கள் விடு­விப்பு, அர­சி­யல் கைதி­கள் விடு­தலை எனப் பல்­வே­று­பட்ட விட­யங்­கள் தொடர்­பில் கலந்­து­ரை­யாடி ஓர் இணைக்­கப்­பாட்­டின் அடிப்­ப­டை­யி­லேயே ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சுக்கு ஆத­ரவு வழங்­கி­னோம்.
இந்த அர­சுக்கு நாம் ஆத­ரவு வழங்­கி­னா­லும் நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­யா­கவே தொடர்ந்து செயற்­ப­டு­வோம். நாம் முன்­வைத்த கோரிக்­கை­கள் நிறை­வே­றும் வரை அர­சுக்­குத் தொடர்ந்து அழுத்­தம் கொடுப்­போம்.
அர­சி­டம் நாம் முன்­வைத்த கோரிக்­கை­க­ளில் புதிய அர­ச­மைப்பு விட­யம் முக்­கி­யம் பெறு­கின்­றது. இந்­தக் கோரிக்கை நிறை­வே­றும் என்று நாம் முழு மன­து­டன் நம்­பு­கின்­றோம். இதை நிறை­வேற்­றியே தீரு­வேன் என்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாடா­ளு­மன்­றில் உரை­யாற்­றும்­போ­தும் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தார்.
எமது நட­வ­டிக்­கைளை நாம் மிக­வும் நிதா­ன­மாக – நேர்த்­தி­யா­கக் கையாள்­வோம். தமிழ் மக்­கள் நலன் சார்ந்­த­தாக எமது நட­வ­டிக்­கை­கள் அனைத்­தும் அமை­யும்’ – என்­றார்.

No comments

Powered by Blogger.