சர்ச்சைக்கு நடுவே அடுத்த போஸ்டரை வெளியிட்ட மஹா படக்குழு

ஹன்சிகா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். யு.ஆர்.ஜமீல் இயக்கும் இந்த படத்தின் இரு போஸ்டர்களை படக்குழு
சமீபத்தில் வெளியிட்டது.
அதில் ஒரு போஸ்டரில் ஹன்சிகா புகைப்பிடிக்கும் தோற்றம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. சில சாமியார்களுடன் அமர்ந்து ருத்ராட்ச மாலை காவி உடையில் ஹன்சிகா கஞ்சா புகைக்கிறார். பின்னணியில் காசி கோவில் உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. 
இதையடுத்து ஹன்சிகா மற்றும் படத்தின் இயக்குநர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த போஸ்டரின் பின்னணியில் மசூதி இருக்கும்படியும், ஹன்சிகா தொழுவது போலவும், பின்னால் நிழல் உருவத்தில் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் காட்சி உள்ளது. இந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

No comments

Powered by Blogger.