தமிழ் மக்களின் நலன்களை நிறைவேற்ற கூட்டமைப்பு தவறியுள்ளது

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, அவர்களின் தேவைகளை நிறைவேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தவறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தாக்குதல் சம்பவமொன்றில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவை நாமல் நேற்று (வியாழக்கிழமை) சிறைக்கு சென்று பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து அங்கு ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தேவைகளை கருத்திற் கொள்ளாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கு அரச சார்பற்ற அமைப்புகளின் நலன்களை நிறைவேற்றும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

No comments

Powered by Blogger.