மாந்தை மேற்கு பிரதேச சபையின் ஒளிவிழா நிகழ்வு
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச சபையின் வருடாந்த ஒளிவிழா பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்றது.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, வடமாகாண ஆளுநர் ரெஜினோட் குரே, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீன்,வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் உட்பட சர்வமத தலைவர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

.jpeg
)

கருத்துகள் இல்லை