நிவாரண உதவும் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கான உதவிப்பொருட்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருமளவிலான பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன.


நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கிடைக்கப்பெறுகின்ற நிவாரணப்பொருட்கள் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையவில்லை எனவே உதவுகின்ற உள்ளங்கள் பாதிக்கப்பட்ட மக்களை வீடுவீடாக சென்று பார்வையிட்டு உதவிகளை மேற்கொள்ளுங்கள் ......

கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம், கமக்காரர் அமைப்போன்ற அமைப்புக்கள் தருகின்ற விபரங்களை அடிப்படையாக கொண்டு உதவாதீர்கள்....

இக் கிராமத்தலைவர்கள் தமது அரசியல் சுய லாபத்திற்காகவும் தமது  பதவிகளை தக்கவைத்துகொள்ளவதற்காக ஊரின் மேல்நிலை மக்களையும் தமக்கு சார்பானவர்களுக்கே உதவுகின்றார்கள்.

இன்று 28-12-2018 மாங்குளம் பகுதியில் மக்கள் ஊடகப்பிரிவுக்கு வழங்கிய தகவலை ஆராய்கின்ற போது உண்மைத்தன்மை
தெரியவந்தது வெள்ளத்தால் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்கள் உணவுக்கு வழியற்றும் நுளம்பு கடியிலிருந்து தப்புவதற்காக சேலைகளை இணைத்து நுளம்பு வலையாக தைத்து பாவித்து வருகின்றார்கள் உண்மையில் உதவி வேண்டியவர்கள் இவர்களே........

ஆனால் பாதிக்கப்பட்ட தம்மை இதுவரை எவரும் வந்து பார்வையிடவில்லையென்றும் நிவாரணப் பொதிகள் ஊரின் மேல்நிலை மக்களுக்கானதே அது தமக்கு எப்போதும் எட்டாக்கனி என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்கள்
எனவே உதவுபவர்கள் பாத்திரம் அறிந்து உதவுங்கள்.
   #ஊடகப்பிரிவு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.